பிப்ரவரி 14-ஆம் தேதி நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரி 27-ஆம் தேதி இந்திய விமானப்படை பாலகோட் தீவிரவாத முகாமில் தாக்குதல் நடத்தியது. இதில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.

இந்த தாக்குதலுக்கு தேசம் முழுவதும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. 40 வீரர்களை இழந்ததற்கு தகுந்த பதிலடி என்று பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எடியூரப்பா முதல் மோடி வரை , பல பாஜக தலைவர்கள் பாலகோட் தாக்குதலை ஓட்டுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் அரசியாலாக்குகிறார்கள். புல்வாமா தாக்குதலை அரசியலாக்ககூடாது என்று எதிர்க்கட்சிகளிடம் கூறிய பாஜக , புல்வாமா தாக்குதலையும், அதன் பிறகு நடந்த விமானத் தாக்குதலையும் அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் பாஜகவுக்கு ஆதரவான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. காற்று பாஜகவின் பக்கம் வீசுகிறது என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தீவிரவாதிகள் பதுங்கிடங்களை அழித்துள்ளது நாட்டில் மோடி ஆதரவு அலையை உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தெரியும்.

இதனால், மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் 22-ல் பாஜகவுக்கு வெற்றி கிட்டும்” என அவர் கூறியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பாஜக தலைவர் அமித் ஷா, உத்தர பிரதேசத்தின் காசியபூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ‘தீவிரவாதத்துக்கு எங்களைத் தவிர யார் முடிவு கட்டுவார்?’ என பேசினார்.

விமானப்படை தாக்குதல் மூலம் நாட்டை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்பதை உலகத்துக்கு அறிவித்துள்ளோம் என்றும் இந்தியாவின் வெற்றிகரமான சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் விமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் பாகிஸ்தான் ஒரு முறைக்கு பத்து முறை யோசிக்க வேண்டும் என்றும் பேசினார் என்று தி ஹிந்து நாளிதழில் வெளியான செய்தி கூறுகிறது.

விமானத் தாக்குதல்களை அரசியலாக்கி வாக்கு வங்கியாக்க அமித் ஷா முயற்சித்துள்ளார். புல்வாமா தாக்குதலை அரசியலாக்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டும் பாஜக புல்வாமா தாக்குதலை அரசியலாக்கிவிருகிரது.

எதிர்க்க்ட்சிகள் எப்போதெல்லாம் புல்வாமா தாக்குதல் அரசின் தோல்வி என்றும் தீவிரவாதத்தை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் கூறுகிறதோ அப்போதெல்லாம் பாஜக பதில் பேசாமல் இருந்து வந்தது . மேலும் எல்லா கட்சிகளும் இந்த விசயத்தில் ஒன்றிணைந்து நின்று போராட வேண்டும் என்றும் அரசியலாக்க்கூடாது என்றும் பாஜக கூறிவந்தது.

காசியபூரில் அமித் பேசிய பிறகு தெளிவாக ஒன்று புரிகிறது. புல்வாமா தக்குதலுக்கு பின் நடந்த விமான தாக்குதலை ஓட்டு கேட்கும் அரசியலாக பாஜக பயன்படுத்தும் என்று. விமானத் தாக்குதல் மூலம் மோடி உலகத்திற்கு செய்தி கூறுகிறார். அதாவது நாட்டை பாதுகாக்க எந்த எல்லைக்கும் மோடி அரசு செல்லும் என்று. விமானத் தாக்குதல் நம்மை காத்துக் கொள்ளவே நாம் அவ்வாறு தாக்குதல் தொடுத்தோம் என்றும் கூறினார்.

பாஜக பூத் ஏஜெண்டுகளுடன் வீடியோ கான்பிரன்சிங்கில் பேசிய மோடி, ‘நாம் ஒன்றாக இணைந்து, போரிடுவோம்.வாழும் பணிசெய்வோம்.வெல்வோம் என்று பேசினார். ஒரு பிரதமர் என்ற வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் குறித்த வதந்திகள், சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளிக்காமல் , தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமர்ந்துகொண்டு நாங்கள் ஒன்றாக இணைந்து நிற்போம் என்று கூறியுள்ளார் மோடி .

கன்னியாகுமரியில் பேசிய மோடி முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாடு தீவிரவாதத்தை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த 2004 முதல் 2014 வரை நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. தீவிரவாதத்துக்கு எதிரான துணிச்ச லான நடவடிக்கையை அப்போது மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்போதைய அரசு அதை செய்யவில்லை.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ராணுவம் துணிச்சலான, துல்லிய மான தாக்குதலை நடத்தியிருக் கிறது. அவர்களுக்கு வணக்கம். தீவிரவாதத்தின் மீதான நடவடிக் கைகளுக்கு ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் ராணுவத்தின் வலி மையை காட்டுகின்றன. இது நாட்டை ஒற்றுமைப்படுத்தி உள்ளது.

ராணுவத்தின் நடவடிக்கை களுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு அசாத்தியமானது. நாட்டில் பயங் கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். தீவிரவாதிகளுக்கு வட்டியும் முதலுமாக அளிக்கப்படும் என்றார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உயிரிழந்த 40 வீரர்களுக்காக தமிழகம் – புதுவையிலுள்ள 40 தொகுதிகளில் பாஜக-வினருக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.

with Inputs from The Wire, The Hindu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here