புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்துச் சென்றதற்கு காரணம் முன்னறிவிப்பு ஏதுமின்றி மோடி அறிவித்த ஊரடங்கு காரணம் அல்ல; கூசாமல் பொய் சொல்லும் மத்திய அரசு

The Home Ministry was responding to a written question by Trinamool Congress MP Mala Roy on steps taken to protect migrant labourers before the lockdown was announced on March 25.

0
257

கொரோனா ஊரடங்கின்போது சாரைசாரையாக புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்றதற்கு காரணம் போலி செய்திகளே என்று மோடி அரசு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கூசாமல் பொய் சொல்லியுள்ளது .  வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முன்னறிவிப்பு ஏதுமின்றி மோடி அறிவித்த ஊரடங்கு காரணமல்ல என்று கூறியுள்ளது . புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்துச் சென்ற போது இறந்தவர்களின் விவரம் குறித்து அரசிடம் எந்த ஆவணங்களும் இல்லை அதனால் இழப்பீடும் இல்லை என்று கூறி அதிர வைத்த மோடி அரசு இவ்வாறு கூறி அதிர வைத்துள்ளது. 

மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீட்டிற்கு நடந்து செல்வதற்கான காரணங்கள் மற்றும் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மாலா ராய் எழுதிய எழுத்துப்பூர்வ கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதிலளித்தது. 

ஊரடங்கு  குறித்த போலி செய்திகளால் உருவாக்கப்பட்ட பீதியால் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடக்க ஆரம்பித்தனர். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள், உணவு, குடிநீர், சுகாதார சேவைகள் மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகளை போதுமான அளவில் வழங்குவது குறித்து கவலைப்பட்டனர் என்று அமைச்சர் நித்யானந்த் ராய். பதிலளித்துள்ளார். 

 இதனை அறிந்த மத்திய அரசு ஊரடங்கு காலத்தில் எந்தவொரு குடிமகனும் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது  என்று அமைச்சர் மக்களவையில் கூறியுள்ளார். 

பேரிடர் காலத்துக்கான  நிதியை பயன்படுத்துமாறு மார்ச் 28 ஆம் தேதியே மாநில அரசுகளுக்கு அனுமதி கொடுத்திருந்தது மத்திய அரசு . தற்காலிக தங்குமிடம், உணவு, உடை, மருத்துவ பராமரிப்பு போன்றவற்றை வீடற்ற மக்களுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வழங்குவதற்காக அந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.  மாநிலங்களுடனான நிதியை அதிகரிப்பதற்காக, ஏப்ரல் 3 ஆம் தேதி பேரிடர் நிதியில் இருந்து மாநிலங்களுக்கு ரூ 11, 092 கோடியை முன்கூட்டியே அறிவித்திருந்தது மத்திய அரசு என்றும் அவர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். 

திங்கள் கிழமை கொரோனா ஊரடங்குக் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து எவ்வித தகவல்களும் அரசாங்கத்திடம் இல்லை. எத்தனை தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள் என்பது அரசாங்கத்திற்கு தெரியாது. எனவே அவர்களுக்கான இழப்பீடு அல்லது நிவாரணம் குறித்து எந்த அவசியமும் ஏற்படவில்லை என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் கூறியிருந்தார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here