உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் மாட்டிறைச்சி தொடர்பாக எழுந்த கலவரத்தில் காவல்துறை உயரதிகாரி சுபோத் குமார் சிங் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக பாஜக இளைஞரணித் தலைவர் ஷிகர் அகர்வால் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் போலீஸ் அதிகாரி சுபோத் குமார் பசுக் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

புலந்தசாகரில் பசு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அதனை கொன்றவர்களை கைது செய்யக் கோரி போராட்டங்கள் நடந்தன. இதன்பின்னர் ஏற்பட்ட வன்முறையின்போது அதனை கட்டுப்படுத்த வந்த காவல் அதிகாரி சுபோத் குமாரை வன்முறையாளர்கள் கோடரியால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர்.

காவல் அதிகாரி சுபோத் குமார் கொல்லப்பட்டது தொடர்பாக பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த யோகேஷ் ராஜ் உட்பட 30-க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்துள்ளனர் .
பலர் தலைமறைவாக உள்ளனர்.

தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஜனவரி 3-ஆம் தேதி பஜ்ரங் தளம் அமைப்பாளர் யோகேஷ் ராஜ் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகள் பிரசாந்த் நட், கல்வா ஆகியோய் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஹாபூரில் ஷிகர் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here