உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் நடந்த வன்முறையின்போது பசுக்குண்டர்களால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங்கை சுட்டது ஒரு ராணுவ வீரர் எனத் தெரியவந்துள்ளது. இவரை விசாரிக்க உத்தரபிரதேச போலீஸாரின் சிறப்பு படை இன்று ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளது .

பசுவதையை காரணமாக வைத்து உத்தரபிரதேசம் புலந்த்சாகரில் மஹாவ் கிராமத்தில் திங்கள்கிழமை கலவரம் நடைபெற்றது. இந்துத்துவா அமைப்புகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த வன்முறையில் சயானா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் (47) மற்றும் கல்லூரி மாணவர் சுனித் குமார்(20) ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இருவர் கொல்லப்பட்ட வழக்கிலும் சேர்த்து முதல் குற்றவாளியாக பஜ்ரங் தளத்தின் மாவட்ட அமைப்பாளர் யோகேஷ் ராஜ் பெயர் உள்ளது.

தமக்கு இந்த வழக்குகளில் எந்த சம்மந்தமும் இல்லை என தலைமறைவாக இருக்கும் யோகேஷ் ராஜும் , பாரதிய யுவ மோர்ச்சாவின் தலைவர் ஷிக்கார் அகர்வாலும் செல்பி வீடியோவை வெளியிட்டுள்ளனர் .

சுபோத் சிங் வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வரும் உத்தர பிரதேச போலீஸுக்கு ஒரு முக்கிய வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. அதில், ஆய்வாளர் சுபோத்தை ஒரு நபர் சுடுவது போல் பதிவாகி உள்ளது.

சுடும் இந்த நபர் விடுப்பில் தன் கிராமத்திற்கு வந்த ராணுவ வீரர் ஜீத்து என போலீஸ் நம்புகிறது. கலவரம் மீது 26 பேர் பெயர்களுடன் பதிவான வழக்கில் இந்த ஜீத்துவும் இடம் பெற்றிருந்தார். இவர் கலவரத்திற்கு பின் ஜம்முவின் ராணுவப் பணிக்கு திரும்பி விட்டதாகக் கருதப்படுகிறது. ஜீத்து கலவரம் நடந்த அன்று மாலையே காஷ்மீர் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது

கலவரத்தில் பலரது கைப்பேசிகளில் எடுக்கப்பட்ட 203 வீடியோ பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. போலீஸாராலும் கலவரத்தை வீடியோக்களில் செய்த பதிவுகள் 20 உள்ளன. இவை அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்ததில் ராணுவ வீரர் ஜீத்து சிக்கியுள்ளார்

இந்த வழக்குகளை உத்தர பிரதேசத்தின் சிறப்பு படைகளான எஸ்.ஐ.டி மற்றும் எஸ்.டி.எப் ஆகியவற்றின் குழுக்கள் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து ஜூத்துவின் அம்மா கூறுகையில் ஜீத்து இன்ஸ்பெக்டர் சுபோத் சிங்கை கொன்றிருக்கமாட்டர். அவர் அவ்வாறு கொன்றிருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டியவரே என்றூம் ஜீத்தை தேடி வந்த போலீஸார் தங்கள் வீட்டை அடித்து நொறுக்கினர் என்றும் கூறினார்.

Courtesy : NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here