டிடி எனப்படும் டிவி ஆங்கர் திவ்யதர்ஷினி தெலுங்குப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான புரி ஜெகன்நாத் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

திவ்யதர்ஷினி 2003 இல் வெளியான நளதமயந்தி படத்தில் முதல்முறையாக நடித்தார். அதன் பிறகு பல வாய்ப்புகள் வந்தும் அவர் நடிக்கவில்லை. சமீபத்தில் தனது கொள்கையை தளர்த்தி திரைப்படங்களிலும் தலைகாட்டுகிறார். ப.பாண்டி, சர்வம் தாளமயம் படங்களில் நடித்தவர் கௌதமின் துருவநட்சத்திரத்திலும் நடித்துள்ளார். இப்போது தெலுங்கில் ஆகாஷ் புரி நாயகனாக நடிக்கும் படத்தில் சார்மியுடன் நடித்து வருகிறார். அனில் படுரி இயக்கும் இந்தப் படத்தை புரி ஜெகன்நாத் தயாரித்து வருகிறார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கில் நடிப்பது என திவ்யதர்ஷினி முடிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here