புரதச் சத்து நிறைந்த சோள தோசை

0
89

சோளத்தில் மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது. இன்று சோள மாவில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

  •  வெள்ளைச் சோளம் –ஒரு கப்
  •  குண்டு உளுந்து –அரை கப்
  •  வெந்தயம் – 2 மேசைக்கரண்டி
  •  உப்பு – தேவையானஅளவு

செய்முறை:

  • குண்டு உளுந்தைந ன்றாகக் கழுவி மூழ்கும் அளவு நீர் ஊற்றி தோராயமாக ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
  • வெந்தயத்தை தனியாக ஊற வைக்கவும்.
  • சோளத்தை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். (சோளம் கடினத் தன்மையுடையதால் ஊறுவதற்கு குறைந்தது ஆறு மணி நேரமாகும். வெந்நீரில் ஊறவைத்தால் நேரம் சற்று குறையலாம்). 
  • சோளம் ஊறியதும் மிக்ஸியில் போட்டு நீர் விடாமல் இரண்டு மூன்று சுற்றுகள் அரைக்கவும். பிறகு நீர் விட்டு நன்கு அரைத்துக்  கொள்ளவும்.
  • உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து உப்புப் போட்டு நன்றாகக் கலந்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும்.

மாவு புளித்ததும் தோசைக்கல்லை சூடாக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான சோள தோசை தயார்.

நன்மைகள்: 

அரிசி சார்ந்த உணவை விட சோள உணவு சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. மேலும் சோளம் இதய நோய்கள், ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் வருவதையும் குறைக்கும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here