புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் உதவிப் பொருட்களை அனுப்புவதற்குக் கட்டணம் கிடையாது எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்குத் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பால், அரிசி, போர்வை, வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகிய உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரசு பேருந்துகள் மூலமாக உதவிப்பொருட்களை அனுப்புவதற்குக் கட்டணமில்லை எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. உதவிசெய்யும் மனப்பான்மையுள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த அறிவிப்பைப் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here