புயலென வானில் பறந்த பயணிகள் விமானம் : சாதனை படைத்தது

For the first time in years, a commercial passenger plane has flown across the Atlantic in less than five hours

0
190

அட்லான்டிக் பகுதியை பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் முதன்முறையாக 5 மணி நேரத்துக்குள்ளாகக் பயண தூரத்தைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸைச் சேர்ந்தபோயிங் 747 பயணிகள் விமானம், நேற்றுக்(ஞாயிற்றுக்கிழமை) காலை லண்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 4 மணி நேரம் 56 நிமிடங்களில் பயண தூரத்தைக் கடந்து நியூயார்க் கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றடைந்தது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிற்வனம், வேகத்தை விட பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அட்லான்டிக் பயண தூரப் பகுதியை 5 மணி நேரத்துக்குள்ளாகக் கடந்த முதல் பயணிகள் விமானம் எனும் சாதனையைப் படைத்தது. முன்னதாக நார்வே விமானம் இந்தப் பயண தூரத்தை 5 மணிநேரம் 13 நிமிடங்களில் கடந்தது சாதனையாக இருந்தது. 

லண்டன் முதல் நியூயார்க் வரையிலான விமானப் பயண தூரம் சராசரியாக 6 மணிநேரம் 13 நிமிடங்கள் ஆகும். குறிப்பாக குளிர் காலங்களில் விமானங்கள் தாழ்வாக இயக்கப்படுகிறது. இதனை சில விமானங்கள் பயன்படுத்தி வேகமாக இயக்கப்படுகிறது.

சிறிய ரக சூப்பர்ஸானிக் கான்கார்ட் விமானங்கள் இந்த குறிப்பிட்ட தூரத்தை 3 மணி நேரத்துக்குள் சென்றடைந்தன. ஆனால்,2003 முதல் அவை இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here