புயலுக்கு பின் மம்தாவை தொடர்பு கொண்டோம்… காலாவதியான பிரதமருடன் பேச விருப்பமில்லை – தெறிக்கவிடும் மம்தா

0
169

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்புக்கு தான் திருப்பி பதிலளிக்கவில்லை ஏனென்றால் காலாவதியான பிரதமருடன்  ( expiry-PM) எந்தவிதமான பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். 

முன்னர் ஒடிசா முழுவதும் பேரழிவை தந்துவிட்டுச் சென்ற ஃபானி புயலைவைத்து மம்தா பானர்ஜி  அரசியல் செய்கிறார் என்று பிரதமர் மோடி குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

 மேற்கு வங்கத்தில் பேரணியில் பங்கேற்று பேசிய மோடி மேற்கு வங்க மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஃபானி புயல் மேற்கு வங்கத்த்தைத் தாக்குவதற்குமுன் மம்தா பானர்ஜியை தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.  ஆனால் அகந்தைக் கொண்ட மம்தா பானர்ஜி என்னுடன் பேசவில்லை என்று  கூறியிருந்தார். 

அதற்கு பதிலளித்திருக்கும் மம்தா பானர்ஜி பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்புக்கு தான் திருப்பி பதிலளிக்கவில்லை ஏனென்றால் காலாவதியான பிரதமருடன்  ( expiry-PM) எந்தவிதமான பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். 

பிரதமர் அலுவலக அதிகாரிகள் இரண்டுமுறை மேற்குவங்க முதல்வர் மம்தாவை தொடர்பு கொள்ள முயற்சித்தோம், அவர் பிரசாரத்திற்கு சென்று விட்டதாக தெரிவித்தார்கள், ஆனால், அவர் எங்கள் அழைப்புக்கு பதில் அழைப்பு விடுக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல்(Fani), நேற்று முன்தினம் காலை ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடலோர பகுதியில் கரையை கடந்தது. 

இந்த ஃபானி புயலானது ஒடிசாவை தொடர்ந்து, மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து சென்றது. இதனால், 2 நாட்களுக்கு தேர்தல் பிரசாரங்களை மம்தா ரத்து செய்து விட்டு,  புயல் தாக்கம் குறித்து கண்காணித்து வந்தார்.

புயல் பாதிப்பு குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் கேட்டறிந்தார். இதேபோல், மேற்குவங்க முதல்வருக்கு அவர் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அம்மாநில ஆளுநரை பிரதமர் தொடர்பு கொண்டதாகவும் ஒரு சில ஊடகங்கள் தெரிவித்தன. 

இரண்டு முறை சனிக்கிழமையன்று மம்தாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்ததாகவும், முதலில் அவர் பயணத்தில் இருக்கிறார் பின்னர் அழைக்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள் என்று  பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here