இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா ட்விட்டரில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனை ஃபாலோ செய்வதை நிறுத்தியுள்ளார்.

அண்மையில் பும்ரா மற்றும் அனுபமா இருவரும்  காதலிப்பதாக  வதந்திகள் பரவியது. இதைத் தொடர்ந்து டிவிட்டரில் அனுபமாவை பின் தொடர்வை பும்ரா நிறுத்திவிட்டார். 

ட்விட்டரில், பும்ரா பின் தொடர்ந்து வரும் 25 நபர்களில் அனுபமா பரமேஸ்வரன் மட்டுமே நடிகை என்பதால் இத்தகைய வதந்தி பரவியது. இந்நிலையில் ஒரு நேர்காணலில் பும்ரா தன்னுடைய நெருங்கிய நண்பர், அதற்கு மேல் இது குறித்து சொல்ல எதுவுமில்லை என்று அனுபமா தெளிவாக கூறியிருந்தார்.

முன்னதாக பும்ராவும், நடிகை ராஷி கண்ணாவும் காதலிப்பதாக வந்த செய்திகளுக்கு ராஷிகண்ணா மறுப்பு தெரிவித்தார். பெண்களைப் பற்றிய இது போன்ற விஷயங்களை ஆதாரமில்லாமல் பகிரக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக பும்ரா டிவிட்டரில் அனுபமாவைப் பின்தொடர்வதை தற்போது நிறுத்தியுள்ளார். பும்ராதற்போது 24 நபர்களை மட்டுமே டிவிட்டரில் பின்தொடர்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here