புத்தாண்டு பரிசாக விலை ஏற்றத்தை அறிவிக்க தயாராகும் உணவுப்பொருள் நிறுவனங்கள்

0
310

ரயில் கட்டண உயர்வு மற்றும் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு ஆகியவை புத்தாண்டிலேயே மக்களைத் தாக்கிய நிலையில், அடுத்த விலையேற்றத்தை அறிவிக்க உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

அமுல் நிறுவனம் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ2 அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மதர் டைரி டெல்லியில் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ 3 அதிகரித்துள்ளது.  

பணவீக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, கச்சாப் பொருட்களின் விலையேற்றம், நுகர்வு குறைவு போன்ற காரணங்களால் தங்களது உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதுவும் இந்த ஜனவரி மாதத்திலேயே இந்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கருதப்படுகிறது.

நெஸ்ட்லே, ஐடிசி, பிரிட்டானியா போன்ற உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், செலவு அதிகரித்து, லாபம் குறைந்ததால், தவிர்க்க முடியாத நிலையில், தங்களது உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்துவது என்று முடிவெடுத்துள்ளன.

பால் ,  எண்ணெய், கோதுமை, சர்க்கரை ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதால், ஒன்று விலையை உயர்த்துவது அல்லது பேக்கின் அளவைக் குறைப்பது என்று ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. 

சாஸ்,  சமையல்  எண்ணெய் , கோதுமை மாவு, சர்க்கரை, நூடுல்ஸ், பிரட், பிஸ்கட் போன்றவற்றின் விலை அதிகரிக்கும் .  

பொதுவாகவே விலையேற்றத்தை பெரும்பாலும் நாங்கள் அமல்படுத்துவதில்லை. ஆனால், தவிர்க்க முடியாத நிலையில், அதனை நாங்கள் செயல்படுத்தியே  ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று நெஸ்ட்லே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 7-12 சதவீத விலை உயர்வை அறிவிப்பது குறித்து பிஸ்கட், பிரட்  தயாரிப்பு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here