புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிட்டது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

காரைக்காலுக்கு (பிப்-26) இன்று காலை வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மாநில பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து காரைக்கால் சந்தைத் திடலில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பங்கேற்று பேசி வருகிறார். அதில் அமித்ஷா பேசியதாவது, பாஜக கூட்டணிக்கு வாக்களித்தால் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடையும்.

புதுச்சேரியில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றாமல் இருந்ததற்கு நாராயணசாமிதான் காரணம். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிட்டது. அக்கட்சித் தலைவர்கள் பாஜகவில் இணைந்துவிட்டனர். நல்ல பொய் சொல்பவர் விருது கொடுக்க வேண்டுமானால் அது நாராயணசாமிக்குத்தான் தர வேண்டும்.

வரும் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும். புதுச்சேரிக்கு மத்திய அரசு கொடுத்த பணத்தை காங்கிரஸ் தலைமையிடம் கொண்டு சேர்த்தார் நாராயணசாமி. நமச்சிவாயம் முதல்வராக வேண்டிய நேரத்தில் நாராயணசாமி முதல்வரானது துரோகமல்லவா? எனத் தெரிவித்தார்.

முன்னதாக புதுச்சேரியில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கமும் பாஜகவில் இணைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here