புதுப்படங்கள் வெளியீடு இல்லை – மீண்டும் திரைக்கு வரும் மெர்சல், வேதாளம்

0
315
Vijay Sethupathi, Ajith Kumar & Vijay

மார்ச் 1 முதல் புதுப்படங்கள் வெளியீடு இல்லை என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கமும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் புதுப்படங்கள் வெளியாகப் போவதில்லை.

கன்னட, கேரள திரையுலகைப் பொறுத்தவரை, அங்குள்ள திரையரங்குகள் ஒருநாள் மட்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளன. டிஜிட்டர் சர்வீஸ் புரவைடர்ஸ் நிறுவனங்களின் கூடுதல் கட்டணங்களுக்கு எதிரான இந்தப் போராட்டம் திரையரங்குகளுக்கும் சாதகமானேதே. ஆனால், அவர்கள் இந்தப் போராட்டத்தை தயாரிப்பாளர்கள் தங்கள் மீது திணித்ததாக குமுறுகிறார்கள். புதுத் தமிழ்ப் படங்கள் திரையிட முடியாததால் மெர்சல், வேதாளம், விக்ரம் வேதா போன்ற மக்கள் ஆதரவு பெற்ற திரைப்படங்களை திரையிட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் க்யூப், யுஎஃப்ஓ நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் சுமூக தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் 2018; 2மடங்காக உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்