புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு , தமிழகத்திற்கு இன்னொரு தீர்ப்பா – டிடிவி தினகரன் கேள்வி

0
246

இன்று வெளியாகி இருக்கும் 18 எம் எல் ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால், நாங்கள் துவண்டுவிடமாட்டோம்; நாங்கள் அனைவரும் போராளிகள் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு , தமிழகத்திற்கு இன்னொரு தீர்ப்பா என்றும் டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார் .

18 டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பு அளித்தனர்.

இவ்வாறு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும், அந்த நீதிபதியை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டி.டி.வி தினகரன் பேசுகையில், 18 எம் எல் ஏ.,க்கள் வழக்கில் வெளியாகி இருக்கும் தீர்ப்பால் நாங்கள் துவண்டுவிடமாட்டோம். இதை எதிர்த்துப் போராடுவோம். காரணம் நாங்கள் அனைவரும் போராளிகள்.

18 எம் எல் ஏ க்களும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் அணி மாறப் போகிறார்கள் என்று கொச்சைப்படுத்த வேண்டாம். கட்சியை மீட்பதற்காக 18 எம் எல் ஏ க்களும், தொண்டர்களும் அணி சேர்ந்துள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் மக்கள் விரோத அரசின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சட்டசபை சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இன்று வேறு மாதிரி தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்