புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகளின் ஆட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சிக்கு வந்தது. இதனையடுத்து, திரிபுராவின் பெலோனியா நகரிலிருந்த லெனின் சிலையை, பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்துடன், பாஜகவினர் இடித்துத் தள்ளினர்.

இதனையடுத்து தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் முகநூல் பதிவைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த பெரியார் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து சென்னை திருவொற்றியூர் பகுதியில் அம்பேத்கர் சிலையும் அவமானப்படுத்தப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி பகுதியிலுள்ள பெரியார் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்