ஹோண்டா நிறுவனம் தனது புதிய ZX MT ஹோண்டா சிட்டி பெட்ரோல் வகை காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ZX MT ஹோண்டா சிட்டி கார் தற்போது பெட்ரோல் இன்ஜின் வெரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த காரின் டெக்னிக்கல் அம்சங்களைப் பார்க்கும் போது, ஆறு ஏர் பேக், LED ஹெட்லாம்ப் ( Headlamp ) , எலக்ட்ரிக் சன் ரூப், ஆட்டோ ஹெட்லைட், டைமண்ட் கட் 16 இன்ச் அலாய் வீல் என பல சிற்ப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ZX MT ஹோண்டா சிட்டி கார் அதே 1.5 லிட்டர் மோட்டருடனே வருகிறது.

தற்போது ஹோண்டா சிட்டி காரானது பெட்ரோல் மற்றும் டீசல் வகையில் மானுவல் கியர் வசதியுடன் SV, V, VX, ZX என நான்கு வகையிலும் வருகிறது.

ஹோண்டா கார்ஸின் துணை தலைவர் ராஜேஷ் கொயல் கூறுகையில், ‘ஹோண்டா சிட்டி ZX MT வகை காரை பெட்ரோல் இன்ஜின் மற்றும் மானுவல் கியர் வசதியுடனும் அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம். இந்த கார் மூலம், மக்களுக்கு ZX வகையில் மேலும் ஒரு சிறந்த காரை ஹோண்டா வழங்கியுள்ளது. இதற்கும் மக்கள் தங்களது ஆதரவை தருவார்கள் என எண்ணுகிறேன்’ என்றார்.

ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் மற்றும் லுனார் சில்வர் மெட்டாலிக் என இரு வண்ணங்களில் வரும் இந்த புதிய காரின் விலை 12.75 இலட்சமாகும்.

புதிய ZX MT ஹோண்டா சிட்டி, மாருதி சூசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, வோல்க்ஸ்வாகன் வெண்டோ ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here