புதிய ஐபேட் ஏர் அறிமுகம்

The new iPads offer more powerful processors with built-in AI capabilities

0
109

ஆப்பிள் நிறுவனம்தனது டைம் ஃபிளைஸ் நிகழ்வில் புதிய ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்ட ஐபேட் ஏர் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது.

ஏ14 பயோனிக் பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள நியூரல் என்ஜின் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை சீராக இயக்கும் திறன் கொண்டது.

இத்துடன் இது முன்பை விட அதிகளவு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.இவைதவிர மேம்பட்ட கேமரா, ஆப்பிள்பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் பென்சில் பல்வேறு புதியஅம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஐபேட், ஐபேட்எஸ் 14 தளத்துடன் கிடைக்கிறது.

இதன் முன்புறம் 7 எம்பி ஃபேஸ்டைம் ஹெச்டி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய ஐபேட் ஏர் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை மிக துல்லியமாக எடுக்க முடியும். இதன் டாப் பட்டனில் டச் ஐடி வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிய ஐபேட் ஏர் 10.9 இன்ச் லிக்விட்ரெட்டினா டிஸ்ப்ளே, ஆல் ஸ்கிரீன் டிசைன், யுஎஸ்பி டைப் சி வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் பென்சில், மேஜிக் கீபோர்டு சாதனங்களுடன் இயக்கும் வசதி கொண்டுள்ளது. இது ஐபேட் ஒஎஸ்14 இயங்குதளம் கொண்டுள்ளது.

ஆப்பிள் புதிய ஐபேட் ஏர் மாடல் இதுவரை வெளியானதில் மிகவும் சக்தி வாய்ந்த ஐபேட் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது ஐந்துவித நிறங்களில் கிடைக்கிறது.

புதிய ஐபேட் ஏர் விலை 599 டாலர்கள் இந்தியமதிப்பில் ரூ. 44088 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here