புதிய 43 இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி : வெளியீட்டு விபரம்

Nokia’s 43 inch smart TV can come with JBL audio, intelligent dimming, DTS TruSurround and Dolby Vision support. is. This new TV from Nokia will run on Android 9.0 operating system and it will provide a viewing experience similar to the 55-inch variant.

0
369

புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல் ஜூன் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது.

நோக்கியா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை போன்றே காட்சியளிக்கும் இதன் வடிவமைப்பும் மற்றும் இதன் சிறப்பம்சங்களும் 55 இன்ச் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலில் குவாட்கோர் பிராசஸர், மாலி 450 எம்.பி. GPU, 2.25 ஜி,பி ரேம், 16 ஜி,பி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு 12 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் சவுண்ட் வழங்கப்படுகிறது.

தற்போதைய தகவல்களின் படி புதிய நோக்கியா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 34 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

புதிய ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here