புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ”மோடிஜிக்கு மக்கள் கண்டனம் தெரிவிக்கக் கூடாது” : பாபா ராம்தேவ்

கறுப்புப் பணம், ஊழல், தீவிரவாதம், நக்சல் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காக ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்துள்ளதாகவும், இதற்கு மக்கள் கண்டனம் தெரிவிக்கக் கூடாது என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாபா ராம்தேவ் கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள் : ”புதிய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் அடிக்க வாய்ப்பில்லை”

இந்நிலையில், புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் கள்ளத்தனமாக அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு வந்துவிட்டதாக தெரிவித்தார். புதிய 2000 ரூபாய் நோட்டுகளால், உயர் மதிப்பிலான நோட்டுகளை அச்சிட்டு கொண்டு செல்வது இன்னும் எளிமையாகிவிடும் என்றும், அதனைத் தடுப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும் என்பதாலும் புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட வேண்டும் என பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : குஜராத்: கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பறிமுதல்; போலீசார் விசாரணை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்