புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியீடு: ஆர்பிஐ

0
396

பச்சை-மஞ்சள் நிறம் கொண்ட புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

2016-இல் ரூ.500 மற்றும் ரூ.1000 ஆகிய பழைய நோட்டுகளை பாஜக மதிப்பிழப்பு செய்தது. இதையடுத்து, புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்தில் விட்டது. இதேபோல், புதிதாக ரூ. 10, ரூ.50, ரூ.100, ரூ. 200 ஆகிய ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு புழக்கத்தில் விட்டது. முந்தைய ரூபாய் நோட்டுகளை ஒப்பிடுகையில், புதிய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் அளவு, வடிவமைப்பு ஆகியவை வேறுபட்டது.

இதைத்தொடர்ந்து, நாட்டின் புழக்கத்தில் உள்ள மொத்தம் ரூபாய் நோட்டுகளில் 9.8 சதவீதம் ரூ. 20 நோட்டுகள் தான் எனத் தெரிவித்த ரிசர்வ் வங்கி, புதிய ரூ. 20 நோட்டுகளும் வெளியிடப்படும் என்று அறிவித்தது. 

இந்நிலையில், புதிய ரூ. 20 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

இந்த புதிய ரூ. 20 நோட்டு 63 மி.மீ* 129 மி.மீ. அளவில் இருக்கும் என்றும், பச்சை-மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாச்சார பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் இந்த புதிய ரூ. 20 நோட்டில் எல்லோரா குகைகள் இடம்பெற்றுள்ளது.

Courtesy:  dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here