HondaAmazenew

ஹோண்டா கார்ஸ் இந்திய சந்தையில் தனது பங்களிப்பை அதிகரிக்க நடப்பு நிதி ஆண்டில் 3 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோண்டா கார்ஸ் “ புதிய ஹோண்டா அமேஸ் கார்” விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் E,S,V மற்றும் VX என்ற தலா 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அனைத்து வேரியண்ட்டுகளிலும் மேனுவல் கியர்பாக்ஸ் நிரந்தர அம்சமாக இருக்கின்றது. சிவிடி கியர்பாக்ஸ் மாடலானது S மற்றும் V ஆகிய நடுத்தர விலை வேரியண்ட்டுகளில் மட்டுமே ஆப்ஷனலாக கிடைக்கும்.

புதிய ஹோண்டா அமேஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக டீசல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனை ஹோண்டா கார் நிறுவனம் அமேஸ் காரில் அறிமுகப்படுத்துகிறது.

காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் விலை குறைவான E வேரியண்ட் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா அமேஸ் கார் நீளத்தில் 5 மிமீ வரையிலும், அகலத்தில் 15 மிமீ வரையிலும் இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் சிறப்பான இடவசதியை அளிக்கும் மாடலாக புதிய ஹோண்டா அமேஸ் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும்.

இந்த கார் ரேடியண்ட் ரெட், ஆர்சிட் ஒயிட் பியர்ல், மாடர்ன் ஸ்டீல், கோல்டன் மெட்டாலிக் பிரவுன் மற்றும் லூனார் சில்வர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

இதன் பெட்ரோல் மாடல் ரூ.5.59 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.6.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். பெட்ரோல் சிவிடி மாடல் ரூ.7.39 லட்சத்திலும், டீசல் சிவிடி மாடல் ரூ.8.39 லட்சத்திலும் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்