புதிய வெஸ்பா நோட்(Vespa Notte) ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் வெஸ்பா LX 125 ஸ்கூட்டரை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.

Di9k6i-UcAAROI7

இந்தியாவில் வெஸ்பா நோட் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

வெஸ்பா நோட் ஸ்கூட்டர் மேட் பிளாக் நிறம் மற்றும் க்ரோம் பாகங்கள் மற்றும் அலாய் வீல்களும் கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது.

புதிய வெஸ்பா நோட் ஸ்கூட்டரில் 125சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 9.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9.9 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் CVT கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.

1000908-9583-vespa-vespa-gts-125-super-notte-verylarge

புதிய வெஸ்பா நோட் வேரியன்ட் சிங்கிள் சைடு முன்பக்க சஸ்பென்ஷன், பின்புறம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரேக்கிங் 150 மில்லிமீட்டர் டிரம் முன்பக்கமும், பின்புறம் 140 மில்லிமீட்டர் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய வெஸ்பா நோட் விலை ரூ.70,285 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்கூட்டரை பயனர்கள் ரூ.2,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலிய மொழியில் நோட் என்றால் இரவு என அர்த்தம். இதனால் புதிய வெஸ்பா நோட் முழுமையாக கருப்பு நிற தீம் கொண்டிருக்கிறது.

DjGCd_FVAAAwupe

வெஸ்பா நோட் சர்வதேச சந்தையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

வெஸ்பா நோட் ஸ்கூட்டரின் சர்வதேச மாடல் இந்திய ஸ்கூட்டரை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here