புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் : உங்கள் பட்ஜெட் விலையில்

Flipkart briefly posted an image revealing the Realme 6i launch details in India.

0
241

இந்தியாவில் ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஜூலை 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதற்கான டீசர் தற்சமயம் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியாகி இருக்கும் டீசரில், ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன், ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் ப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் சக்திவாய்ந்த மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. 

புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஜூலை 14 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டு இயங்கும்புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனில்  6.5 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், மீடியாடெக்ஹீலியோ ஜி90டி பிராசஸர், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

மேலும் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனில்  4 ஜி.பிரேம், 64ஜி.பிமெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும்வசதி மற்றும் டூயல் சிம் ஸ்லாட் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

இதன் கெமராவைப்பொறுத்த வரை – 48 எம்பி பிரைமரி கேமரா, – 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்,- 2 எம்பிமோனோ சென்சார், -2 எம்பி  மேக்ரோ சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம்  உங்கள் செல்ஃபிக்காக  16 எம்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன.

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 6எஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன்என கூறப்படுகிறது.

இந்தியாவில் ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் துவக்க விலை ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13999 என நிர்ணயம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here