புகழ்பெற்ற சோனி நிறுவனம் ஜூன் 3 ஆம் தேதி டிஜிட்டல் நிகழ்வினை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் புதிய பிளேஸ்டேஷன் 5 (பிஎஸ்5) விளையாடக் கூடிய கேம்களை அறிமுகம் செய்ய சோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கேமிங் கன்சோல் பற்றிய தகவல்களை சிறிது சிறிதாக வழங்கி வரும் சோனி நிறுவனம், இந்தநிகழ்வில் முழு விபரங்களை வெளியிடுமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், பிஎஸ்5 பற்றிய மேலும் சில விவரங்களை அறிவிக்கும் என தெரிகிறது.

Sony-Play-Station-5-i-Play-Station-5-Pro-5-1-large

சோனி நிறுவனத்தின் புதிய கன்சோல் வடிவமைப்பு பற்றி குறைந்தளவு விவரங்களே வெளியாகி இருக்கிறது. எனினும், ஜூன் 3 ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படும் நிகழ்வில் சோனி புதிய கன்சோல் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை அறிவிக்கும் என தெரிகிறது.

497466327

வரும் வாரங்களில் இந்த நிகழ்வு நடைபெற்று 2020 பண்டிகை காலகட்டத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. கேம்களை பற்றி அதிக விவரங்கள் இல்லாத நிலையில், பிளே ஸ்டேஷன் அதிகாரப்பூர்வ பத்திரிகை #176 பதிப்பில் புதிய கன்சோலுக்கான 38 கேம்கள் பற்றிய விவரங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த டிஜிட்டல் நிகழ்வு நடைபெறும் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here