புதிய பிளான்களை அறிவித்த ‘வோடாஃபோன்’ : நாள்தோறும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்

0
312

வோடாஃபோன் நிறுவனம் புதிய பிரிபெய்டு பிளான்களை அறிவித்துள்ளது.

அந்த வகையில் ரூ.558 மற்றும் ரூ.398க்கு புதிய பிளான்களை அறிவித்திருக்கிறது.

வோடாஃபோன் நிறுவனம் பிரிபெய்டு சிம்களுக்கு ஏற்கனவே ரூ.558 மற்றும் ரூ.398க்கு ஏற்கனவே பிளான்கள் இருக்கின்றன. ஆனால் இவை மத்தியப் பிரதேசத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் மகாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பிளானை மேலும் மேம்படுத்தி, அனைத்து வாடிக்கையாளர்களுக்குமாக வோடாஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.558க்கு ரீசார்ஜ் செய்தால் 56 நாட்களுக்கு அன்லிமிடெட் போன் கால்ஸ், நாள்தோறும் 3ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ்-கள் வழங்கப்படும். இதேபோன்று சலுகைகள் ரூ.398க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு வழங்கப்படும். இதுதவிர ரூ.129க்கு ரீசார்ஜ் செய்தால் 21 நாட்களுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸும், ரூ.19க்கு ரீசார்ஜ் செய்தால் 2 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் நாள் ஒன்றுக்கு 200 எம்பி டேட்டா வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here