சோனி நிறுவனம் தனது புதிய கேமிங் கன்சோல் பிஎஸ்5 சீரிஸ் இந்திய விலை குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிஎஸ்5 ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 49,990 என்றும் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 39,990 என நிர்ணயம் செய்துள்ளது. ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் புளூ-ரே டிரைவ் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் எடிஷனில் இந்த டிரைவ் வழங்கப்படவில்லை.

எக்ஸ்பாக்ஸ் போன்று இல்லாமல், பிஎஸ்5 இரண்டு வேரியண்ட்களின் ஹார்டுவேர் அம்சங்களும் சமமாகவே வழங்கப்பட்டு உள்ளன. ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் கேம்களை சிடிக்களில் இருந்து லோட் செய்ய முடியும். இரு கன்சோல்களுடன் பல்வேறு கேமிங் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

பிளே ஸ்டேஷன் ஹெச்டி கேமரா ரூ. 5,190 விலையிலும், பல்ஸ் 3டி வயர்லெஸ் ஹெட்செட் ரூ. 8,590 விலையில் கிடைக்கிறது. இதேபோன்று பிளே ஸ்டேஷன் மீடியா ரிமோட் ரூ. 2,590 என்றும் டூயல் சென்ஸ் சார்ஜிங் ஸ்டேஷன் கன்ட்ரோலர்கள் ரூ. 2,590 என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

இந்தியாவில் பிஎஸ்5 சீரிஸ் மாடல்களின் விலை எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மற்றும் சீரிஸ் எக்ஸ் மாடல்களை விட குறைவு. தற்சமயம் விலை அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் விற்பனை குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here