புதிய பாராளுமன்றம் கட்டும் பணி ஒப்பந்தம் : ஒப்பந்தத்தை பெற்றது டாடா நிறுவனம்

The Central Public Works Department opened the financial bids for the construction of a new parliament building today.

0
97

டெல்லியில் சவுத் பிளாக்கிற்கு அருகே சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படும் பகுதியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம், அரசு துறைகளுக்கான 8 கட்டடங்கள், அலுவலகர்களுக்கான குடியிருப்புகளை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்பகுதியில் அசோகச் சின்னம் நிறுவப்பட உள்ளது.

வரும் 2026 ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தொகுதிகளின் எண்னிக்கை மறுவரையரை செய்யப்படும் போது, உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தற்போதே பாராளுமன்றம் இட நெருக்கடியால் அவதிப்படும் நிலையில், வரும் காலத்தையும் மனதில் கொண்டு புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக டெல்லியில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்டிடம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கியது.

இப்பணி ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. நிதி முறையிலான டெண்டருக்கு டாட்டா, எல் அண்ட் டி மற்றும் சபூர்ஜிபலோன்ஜி நிறுவனங்கள் தகுதி பெற்றன.அவற்றின் விண்ணப்பங்களை இன்று (செப்.16) மத்திய அரசின் பொதுப்பணித்துறை பிரித்துப் பார்த்தது.

அதில் 861 கோடியே 90 லட்ச ரூபாய்க்கு ஏலம் கேட்டிருந்த டாட்டா நிறுவனத்துக்குக் கட்டிடப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. எல் அண்டு டிநிறுவனம் 865 கோடி ரூபாய்க்குப் பணி ஒப்பந்தத்தைக் கேட்டிருந்தது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுற்றதும் புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனக்கூறப்படுகிறது.

நடப்பு நாடாளுமன்றக் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் ஒரே நேரத்தில் 900 முதல் 1,200 எம்.பி.க்கள் வரை  அமர முடியும். வரும் 2022ல் கட்டப்பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here