ஹெச்.எம்.டி.  குளோபல்  நிறுவனம்  புதிய  நோக்கியா ஸ்மார்ட்போன்களை  அறிமுகம் செய்யவிருக்கிறது. செப்டம்பர்  5 ஆம்  தேதி நடைபெற  இருக்கும் ஐ.எஃப்.ஏ. 2019 நிகழ்வில்  புதிய நோக்கியா  ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும்.

எனினும்,  எந்தெந்த  மாடல்கள் என்பது குறித்த விபரங்களை ஹெச்.எம்.டி. குளோபல்  வழங்கவில்லை. ஏற்கனவே  வெளியான தகவல்களின்  படி நோக்கியா 6.2 மற்றும்  நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்கள்  அறிமுகம்  செய்யப்படலாம்   என  தெரிகிறது.

டேர்டெவில்  மற்றும்  ஸ்டார்-லார்டு  எனும்  குறியீட்டு  பெயரில் இந்த இரு  ஆண்ட்ராய்டு  ஒன்  ஸ்மார்ட்போன்களும்  உருவாகி வருகின்றன.  நோக்கியா  6.2 மற்றும்  நோக்கியா  7.2 ஸ்மார்ட்போன்களில்  பின்புறம்  கைரேகை  சென்சார்,  6.2 இன்ச் FHD  பிளஸ்  டிஸ்ப்ளே, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 120-டிகிரி அல்ட்ரா – வைடு லென்ஸ் வழங்கப்படுகிறது.

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்ஸ்னாப்டிராகன் 660 பிராசஸரும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸரும் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும், நோக்கியா110 (2019), நோக்கியா 2720 (2019) மொபைல் போன்களையும் இதே நிகழ்வில் ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக 5ஜி, மேம்பட்ட லோ-லைட் மற்றும் வீடியோ அம்சங்களுடன் நோக்கியா 9.1 பியூர்வியூ ஸ்மார்ட்போன், அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.எனினும், இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்திற்குபின் அறிமுகமாகும்என எதிர்பார்க்கப்படுகிறது.