மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆல்டோ ஹேட்ச்பேக் இந்தியாவில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆல்டோ ஹேட்ச்பேக் தற்சமயம் விற்பனையாகும் ஆல்டோவிற்கு மாற்றாக அறிமுகமாகிறது.

மாருதி சுசுகி ஆல்டோ இந்தியாவில் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் 35 லட்சத்துக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இது ஒரு என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடல் ஆகும்.

001

புதிய ஆல்டோ ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் போது பாரதிய புதிய வாகன பாதுகாப்பு திட்டத்தின் (BNVSAP) கீழ் அறிமுகமாக இருப்பதாகவும் இந்த திட்டத்தின் கீழ் அந்நிறுவனம் தான் தயாரிக்கும் அனைத்து கார்களுக்கும் வாகனத்தின் பாதுகாப்பு அம்சத்தை வைத்து கடுமையான சோதனைகளுக்கு பின் நட்சத்திர குறியீடுகளை வழங்குகிறது.

003

பாதுகாப்பு அம்சங்கள் தவிர, புதிய கார் பிஎஸ்-IV ரக எமிஷன்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஆல்டோ ஜப்பானில் விற்பனை செய்யப்படும் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு தற்போதைய மாடலிருந்து முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இதன் வடிவமைப்பு கான்செப்ட் ஃபியூச்சர் எஸ் சார்ந்து இருக்கும் என்றும் கூறப்பட்டது.

மாருதி சுசுகி நிறுவனம் கான்செப்ட் ஃபியூச்சர் எஸ் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வடிவமைப்பு தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக் ORVM உள்ளிட்டவை
தவிர இதில் பல்வேறு வசதிகள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

15_02_2017-alto2018

புதிய மாருதி சுசுகி ஆல்டோ மாடலில் 1.0 லிட்டர் இன்ஜின் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் 1.0-லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 67 பிஹெச்பி, 91 என்எம் டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here