ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,999 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை சுமார் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் மட்டும் பி.எஸ்.என்.எல். நிறுவன 4ஜி சேவைகள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக பி.எஸ்.என்.எல். ரூ.1,999 சலுகை சென்னை மற்றும் தமிழ் நாடு வட்டாரங்களில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஜியோ வரவுக்கு பின் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சேவைகளுக்கான கட்டண முறை வெகுவாக மாற்றப்பட்டது. 
அன்று முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை அவ்வப்போது குறைத்து வருகின்றன. ரூ.1,999 விலையில் ஜியோ வழங்கும் சேவையில் 180 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 125 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.

முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் சலுகைகளை அந்நிறுவனம் மாற்றியமைத்து, பழைய சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குகின்றன. இத்துடன் பிரீபெயிட் சலுகைகளுடன் தனிப்பட்ட ரிங்-பேக் டோன்களை வழங்குகின்றன.

courtesy:maalaimalar

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்