பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான ஜியோமி, ஒன்பிளஸ், மோட்டோரோலா போன்றவை தற்போது ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் அவர்களது ஸ்மார்ட் டிவிகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், நோக்கியா நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதற்காக பிரபல இகாமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் உடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. கூடிய விரைவில் டிவி இந்திய சந்தைக்குள் நோக்கியா நிறுவனம் நுழையவுள்ளது.

சீன நிறுவனமான ஜியோமி அதன் மலிவு விலையிலான மி டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த தொடங்கியதில் இருந்து கனவில் கூட எண்ணிப்பார்க்காத சில நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவி சந்தைக்குள் நுழைந்த வண்ணம் உள்ளன. தற்போது அந்த பட்டியலில் நோக்கியாவும் இணைந்துள்ளது.

கூடுதல் சுவாரசியமாக, நோக்கியா ஸ்மார்ட் டிவிகள் ஆனது ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் ஒரு பகுதியாக உற்பத்தி செய்யப்பட உள்ளன. நோக்கியா மற்றும் ஃப்ளிப்கார்ட்டின் இந்த கூட்டணியின் வழியாக ஆயிரக்கணக்கான புதிய வேலைகள் உருவாகும் என்றும், நோக்கியா டிவிகளின் முதல் விற்பனையை நாங்கள் நிர்வகிப்போம் என்றும் இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட் டிவிகளில் ஜேபிஎல் நிறுவனத்தின் ஒலி அமைப்பு இடம்பெறும், ஏனெனில் நோக்கியா நிறுவனம் சிறந்த ஆடியோ தரத்தை உறுதிப்படுத்துகிறது. தொலைக்காட்சியை வாங்கும் நுகர்வோருக்கு மோசமான ஒலி தரம் என்பது ஒரு முக்கிய வேதனையாக உள்ளது என்றும், அதை நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட் டிவிகள் தீர்த்து வைக்கும் என்றும் ஃப்ளிப்கார்ட் கூறியுள்ளது.

கூறப்படும் நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட் டிவிகள் ஆனது இ-காமர்ஸ் தளத்தில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது சார்ந்த விவரங்கள் எதுவும் வெளிப்படுத்தவில்லை. அதேபோல், இந்த ஸ்மார்ட் டிவிக்கள் எப்படி இருக்கும் அல்லது இந்தியாவில் அவற்றின் எதிர்பார்க்கப்படும் விலை என்ன போன்ற கேள்விகளுக்கும் எந்த பதிலும் இல்லை.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here