09-08-samsung-galaxy-note-9

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது.

கேலக்ஸி நோட் 9, 6.4 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள்ளடங்கிய நினைவகம், 8 ஜிபி ரேம், 512 ஜிபி உள்ளடங்கிய நினைவகம் மேலும் மெமரியை நீட்டிக்கும் வசதி ஆகியவற்றுடன் வருகிறது.

12 எம்பி பிரைமரி கேமரா, f/1.5, f/2.4 அப்ரேச்சர், 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரிஸ் சென்சார், கைரேகை சென்சார் ஆகிய அம்சங்கள் கேமராவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, பிக்ஸ்பி அசிஸ்டண்ட் சேவை மற்றும் இதனை இயக்க பிரத்யேக ஹார்டுவேர் பட்டன் வழங்கப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட எஸ் பென் ஸ்டைலஸ் ப்ளூடூத் வசதி மற்றும் பட்டன் கொண்டுள்ளது. இதை கொண்டு செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். கேமராவை ஆன் செய்து ஸ்டைலஸ்-இல் உள்ள பட்டனை க்ளிக் செய்தால் போதும். மேலும் இந்த பட்டன் கொண்டு வீடியோவை பிளே, பாஸ் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்க முடியும்.

நோட் 9 ஸ்மார்ட்போனில் AKG டியூன் செய்த ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சவுன்டு சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் புதிதாக வழங்கப்பட்டுள்ள ஏ.ஆர். எமோஜி மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் முகத்தில் உள்ள 100-க்கும் அதிகமான முக நுணுக்கங்களை கண்டறிந்து 3D மாடல் ஒன்றை உருவாக்கி உங்களது முகபாவனைகளை உருவாக்குகிறது.

நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், லாவென்டர் பர்ப்பிள் மற்றும் மெட்டாலிக் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த நிறங்களுக்கு ஏற்ற வகையில் எஸ் பென், ஓசன் புளு ம்ற்றும் எல்லோ நிறங்களில் வழங்கப்படுகிறது.

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி வெர்ஷன் விலை 999.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.68,750) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி ரேம் மாடல் 1249.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.85,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கேலக்ஸி நோட் 9 விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி ஆரம்பிக்கிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்