சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ10 மாடலின் லைட் எடிஷனான கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது.

புதிய கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போனில் இதில் 5.83 இன்ச் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, 8 எம்.பி. பிரைமரி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக இதன் சிறப்பம்சங்களை அறிவிக்கப்படவில்லை.

மேலும் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1520 பிக்சல் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே பேனல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ., எக்சைனோஸ் 7884 பிராசஸர், 2 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9 லென்ஸ் மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

புதிய கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போனின் விலை 179.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,500) ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here