கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்  சாம்சங் நிறுவனவனத்தால் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன் விற்பனை கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமானது.

இந்நிலையில் 2019 சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் அந்நிறுவனம் புது வடிவமைப்புடன் கூடிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த வடிவமைப்பில் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில், சதுரங்க வடிவமைப்பு பெறுகிறது. இதில் பன்ச்-ஹோல் ரக கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. புதிய மாடல் புளும் என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.

SM-F700F எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே மற்றும் 1 இன்ச் கவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 990 சிப்செட் அல்லது 5ஜி எக்சைனோஸ் மோடெம் 5123 வழங்கப்படலாம்.

2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா அல்லது கேலக்ஸி அன்பேக்டு விழாவில் சாம்சங் தனது இரண்டாம் தலைமுறை கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம்.

கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலின் விலை முதல் தலைமுறை மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here