புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Chennai Weather Forecast.

0
139

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் வரும் 9 ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு பரவலாக தமிழகம், கேரளா, கர்நாடக கடலோர பகுதி மற்றும் தெற்கு கர்நாடக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை, குஜராத், கோவா உள்ளிட்ட இடங்களில் கனமழை தொடரும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம். நேற்று(புதன்கிழமை) மாலை ஐந்தரை மணி நிலவரப்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here