புதிய கல்விக் கொள்கை : நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று(ஆகஸ்ட் 01) உரை

Prime Minister Narendra Modi to address the nation tomorrow (August 01, 2020) at 4:30 PM on the New Education Policy.

0
124

இதில் உள்ள மும்மொழிகொள்கை, எம்.பி.எல்.பாடப்பிரிவு ரத்து போன்ற அம்சங்களுடன் வந்துள்ள இந்தியாவின் புதிய கல்விக்கொள்கை ஜூலை 29-ல் மத்திய அரசு வெளியிட்டது. 

கடந்த 34 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்விக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. மத்தியஅரசின் புதிய கல்விக் கொள்கைக்கு, எதிர்க்கட்சிகள், ஆசிரியர்அமைப்புகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து அவர் விளக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உரையில் கொரோனா பாதிப்பு, ரபேல் போர் விமானங்கள் வருகை உள்ளிட்டவை குறித்தும் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here