இந்தியாவில் ஒன் பிளஸ் 6T ஸ்மார்ட்போன் தண்டர் பர்ப்பிள் (Thunder Purple) என்ற புதிய நிறத்தில் வெளிவரவுள்ளது. 

ஸ்மொர்ட்போன் தயாரிப்பில் முன்னனி சீன நிறுவனமான ஒன் பிளஸ், அண்மையில் சிவப்பு நிறத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் ரெட் எடிசன் (Red Edition) என்ற பெயரில் கச்சிதமான ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டது.
இதனையடுத்து, ஒன்பிளஸ் 6T என்ற பெயரில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு பயனுள்ள சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
துவக்கத்தில் ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் மிட் நைட் பிளாக், மிர்ரர் பிளாக் என்ற இரண்டு நிறத்தில் வெளிவந்தது. பின்னர், தண்டர் பர்ப்பிள் எனும் கண்னை கவரும் வகையில் புதிய நிறத்திலான ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த புதிய நிற ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் பலரையும் ஈர்த்தது. இதனையடுத்து வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு இணங்க இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் தண்டர் பர்ப்பிள்நிறத்திலான ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விரைவில் இந்த புதிய நிற ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 37,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்து. 


OnePlus 6T இல் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்:

ஆப்ரேட்டிங் சிஸ்டம்: OxygenOS 
ஆண்ட்ராய்டு: Android 9.0 Pie 
டிஸ்ப்ளே அளவு: 6.28 இன்ச் 
ரேம்: 6 மற்றும் 8 ஜிபி 
இன்பீல்ட் மெமரி: 256 ஜிபி 
கேமரா: டூயல் கேமரா 
முன்புற கேமரா: 16 மெகா பிக்சல் 
பின்புற கேமரா: 20 மெகா பிக்சல் 
பேட்டரி சக்தி: 3,700 mAh, 20 வாட் அதிகவேக சார்ஜ் செய்யும் வசதி 


சலுகைகள்:

– தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.1,500 கேஷ்பேக்

– அமேசான் மற்றும் ஒன்பிள் பிரத்யேக ஆஃப்லைன் விற்பனையகங்களில் மூன்று மாதங்கள் வட்டியில்லா மாத தவணை முறை வசதி

– கோடாக் செர்விஃபை வழங்கும் 12 மாதங்களுக்கான இலவச இன்சூரன்ஸ்

– ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் ரூ.299 சலுகையை தேர்வு செய்யும் போது ரூ.5,400 வரை உடனடி கேஷ்பேக், ரூ.150 மதிப்புள்ள 36 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here