பங்குச் சந்தை இன்று (திங்கள்கிழமை) இதுவரை இல்லாத புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 37,714.70 புள்ளிகளில் தொடங்கி 37,805.25 புள்ளிகள் வரைச் சென்று புதிய உச்சத்தை தொட்டது. நிஃப்டி 11,401.50 புள்ளியில் தொடங்கி 11,427.65 உச்ச புள்ளிகளை தொட்டது. நிஃப்டி முதல் முறையாக 11,400 புள்ளிகளைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. காலை 10.45 மணி அளவில் சென்செக்ஸ் 163.27 புள்ளிகள் உயர்ந்து 37,719.43 ஆக வர்த்தகமானது. நிஃப்டி 11,401.95 புள்ளிகளில் வர்த்தகமானது.

வரலாற்று உச்சம் பெற்ற இன்றைய வர்த்தகம் பற்றி தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்

இன்றைய வர்த்தகத்தில் எஸ்.பி.ஐ(2.70%), ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (2.46%) வேதாந்தா(1.40%), எஸ் பேங்க் (1.22%), டாடா ஸ்டீல் (1.15%) ஆகிய சென்செக்ஸ் பங்குகள் நல்ல உயர்வை பெற்றன.

யூ.பி.எல் (2.32%), எஸ்.பி.ஐ (2.31%), ஐ.சி.ஐ.சி.ஐ (2.20%), ஆக்சிஸ்(1.34%), டாடா ஸ்டீல் (1.31%)ஆகிய நிஃப்டி பங்குகள் நல்ல உயர்வை பெற்றன.ஐம்பதில் 40 நிஃப்டி பங்குகள் உயர்வை பெற்றன.

சென்ஸ்செக்ஸின் அனைத்து பங்குகளும் உயர்வை சந்தித்தன. பொதுத்துறை வங்கிகள் 2.04% உயர்வை பெற்றன.
ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ, இன்ஃபோசிஸ், ஐ.டி.சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்றைய பங்குச் சந்தை உயர்வுக்கு காரணமாக இருந்தன.பங்குச் சந்தை இன்னும் உயரும் வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆசிய பங்குகள் இன்று உயரத் தொடங்கின. அமெரிக்கா – சீன வர்த்தக போரால் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு வர சீனா எடுத்த நடவடிக்கையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.சீன பங்குச் சந்தைகள் உயர்வுடன் இருந்தன.

சென்செக்ஸின் தகவல்படி அந்நிய முதலீட்டாளர்கள் 5.87 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றுள்ளனர். உள் நாட்டு முதலீட்டாளர்கள் 87.08 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

Courtesy : NDTV

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்