புதிதாக 1000 பேருந்துகள், சித்தா பல்கலைக்கழகம், மகளிர் பேறுகால விடுப்பு அதிகரிப்பு, 4 இடங்களில் டைடல் பூங்காக்கள் – தமிழக பட்ஜெட்

0
325

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்

அதில் அவர் அறிவித்திருப்பதாவது,

தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு, புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு டீசல் மானியமாக ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மெட்ரோ ரயில் போக்குவரத்தின் 2ஆம் கட்டப் பணிகள் 2026க்குள் நிறைவு பெறும்.

தமிழகத்தில்தான் அதிக அளவிலான தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளில் புறவழிச்சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

17,899.17 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

ஐஐடி உதவியுடன் தமிழ்நாடு ஆளில்லா விமான பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

நெய்வேலியில் நிலக்கரி நிறுவனத்தின் உதவியுடன் புதிய தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மின்வாகன பூங்கா அமைக்கப்படும்.

காஞ்சிபுரத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்கப்படும்.

தூத்துக்குடியில் 4,500 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா அமைக்கப்படும்.

சென்னை காவனுர், நந்தம்பாக்கத்தில் 168 கோடியில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும்.

ஓசுரில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும்.

விழுப்புரம், திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

அரியலூர், பெரம்பலூரில் 10 கோடி ருபாய் செலவில் புவியியல் புதைபடிவ பூங்கா அமைக்கப்படும்.

கோவையில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா செயல்படுத்தப்படும்.

திருவண்ணாமலை, தருமபுரி, நெல்லை, விருதுநகர், விழுப்பும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்படும்.

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்திற்கு மானியம் வழங்க 215.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

அதன்படி, தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காங்கள் அமைக்கப்படும்.

சென்னையில் நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்.

சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடியில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும்.
சென்னை காவனூரில் 2வது கட்டமாக நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்.

நடப்பாண்டில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகர், நாமக்கல், தேனி, சிவகங்கை, விழுப்புரம், நாகையில் புதியதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here