புகார் அளித்த பெண்ணை ஜாமினில் வெளிவந்து அடித்துக்கொன்ற கும்பல்

0
652

உத்தரபிரதேசத்தின் கான்பூர் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டில்6 பேரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 13 வயது சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட அந்த கும்பல் புகார் அளித்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளது. 

இதையடுத்து, 13வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 6 பேரில் 4 பேரை 2018ல் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் உள்ளூர் நீதிமன்றம் தற்போது, ஜாமின் வழங்கியுள்ளது.

இதையடுத்து, சிறையில் இருந்து வெளிவந்த அந்த கும்பல் புகார் அளித்த அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து புகாரை வாபஸ் வாங்குமாறு எச்சரித்துள்ளது. எனினும், புகாரை திரும்ப பெற மாட்டோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர்.

இதையடுத்து, உயிரிழந்த சிறுமியின் தாய், மற்றும் அவர்களது உறவினர்கள் என வீட்டில் இருந்த அனைவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதையடுத்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, 5 நொடிகள் ஒடக்கூடிய வீடியோ ஒன்று வெளியானது. தெளிவாக தெரியாத அந்த வீடியோவில் அந்த பெண்ணை சிலர் கடுமையாக தாக்குகின்றனர். மற்றொரு வீடியோவில் அந்த பெண்ணின் குடும்பத்தை சுற்றி போலீசார் நிற்கின்றனர்.

இதையடுத்து, இந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல்லஃ சம்பவத்தில் ஈடுபட்ட மேலும், 3 பேரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here