பீஹாரில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கோசி ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் மோடி

Prime Minister Narendra Modi will inaugurate the historic Kosi Rail Mega Bridge in Bihar on Friday (September 18, 2020).

0
115

பீஹாரில் வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்.18) திறந்து வைக்க உள்ளார்.

516 கோடி ரூபாய் மதிப்பில் 1.9 கி.மீ. நீளத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்தபாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன.

பீஹாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு 2003- 2004 ஆண்டில் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் இந்த கோசிரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் இந்த பாலம் திறக்கப்படுவது பீஹார் வரலாற்றில் சிறப்பு மிக்க தருணமாகும். இதன் மூலம் 86 ஆண்டு கனவு நிறைவேற உள்ளது. பிராந்திய மக்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்க உள்ளது. இந்த திட்டத்துடன் மேலும் 12 ரயில் திட்டங்களையும் பிரதமர் அறிமுகம் செய்துவைக்க உள்ளார்.

பீஹாரில் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் கடந்த சில நாட்களில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்து உள்ளார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here