உத்தரபிரதேசத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த `பீம் ஆர்மி’ தலைவர் ராவண் என்றழைக்கப்படும் சந்திரசேகர் ஆசாத் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் ஷாரன்பூரில் இருக்கும் ஷபிர்பூர் கிராமத்தில் மே5, 2017 இல் கைது செய்யப்பட்டார். அம்பேத்கர் பிறந்த நாளின்போது தலித் பிரிவினர் நடத்திய ஊர்வலத்தை தாக்கூர் பிரிவினர் தடுத்த காரணத்தால் ராஜ்புத் அரசர் மகரானா பிரதாப்புக்கு ஊர்வலம் நடத்திய தாக்கூர் பிரிவினரை தலித் பிரிவினர் தடுத்தனர் .

தலித் பிரிவினரின் இந்த செயலுக்கு தாக்கூர் பிரிவினர் ஷபிர்பூரில் இருக்கும் தலித்துகள் வசிக்கும் பகுதிகளை அடித்து நொறுக்கினர். தலித்துகளின் கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டது . பதிலுக்கு தாக்கூர் பிரிவினர் தலித்துகள் தாக்கூர் பிரிவினரில் ஒருவரை கொன்றுவிட்டனர் என்று கூறினர். ஆனால் தலித்துகளின் வீடுகளை தீயிட்டு கொளுத்தும்போது தாக்கூர் பிரிவினரில் ஒருவர் விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது .

இவ்வாறு நடந்த மோதல்களில் பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது . ஜாமீனீல் விடுதலையான சந்திர சேகர் ஆசாத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய்ப்பட்டார்.

திடீரென்று பீம் ஆர்மி தலைவரை விடுதலை செய்திருப்பது உத்தரபிரதேசத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் , பாஜகவின் தேர்தல் யுக்தியாகப் பார்க்கப்படுகிறது . இவரின் விடுதலை என்ன விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை ஆனால் தலித் வாக்கு வங்கிகளை பிரிக்கலாம் என்று கருதப்படுகிறது ஏனென்றால் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் பீம் ஆர்மிக்கும் இருக்கும் போட்டியால் இவ்வாறு பார்க்கப்படுகிறது . இருந்தாலும் பாஜகவுக்கு எந்த நன்மையும் ஏற்படபோவதில்லை .

3

தலித் சமூகத்தின் பிரிவுகளில் இருந்து தொடர்ச்சியான தாக்குதலுக்கு பாஜக தொடர்ந்து ஆளாகி வருகிறது. எஸ்சி எஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு போராடிய தலித் மக்கள் மீது போலீஸ் நடத்திய வன்முறையால் பாஜகவுக்கு கிடைத்த எதிர்ப்பால் மசோதாவை தாக்கல் செய்தது மத்திய அரசு.

தலித்துகளின் எதிர்ப்புக்கு ஆளானதால்தான் பாஜக உத்தரபிரதேச இடைத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தது என்று கூறப்பட்டது.

சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும் பீம் ஆர்மிதலைவர் சந்திரசேகர் ஆசாத் செய்தியாளர்களிடம் பேசும் போது பாஜகவின் குண்டர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழச்செய்வதே என் நோக்கம் என்றும் அரசாங்கம் கொடுக்கும் அழுத்தத்திற்கு கட்டுப்படாமல் அரசியலமைப்பு முறையில் போராடி பாஜக வை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவதே என் நோக்கம் என்றும் கூறினார். மேலும் மாயாவதி பற்றி கூறும் போது அவருகும் எனக்கும் ஒரே ரத்தம் தான், அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறினார்.

நான் சிறையில் இருக்கும்போது பல்வேறு தலித் இளைஞர்களை அங்கு சந்தித்தேன் , அவர்கள் போலீஸாரால் பொய் புகார்கள் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கூறினார்.

பெயர் குறிப்பிட விரும்பாத முஸ்லிம் ஆசிரியர் ஒருவர் பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத் பற்றி கூறும் போது அவர் எப்போதுமே கன்சிராமின் வழி நடப்பவர். முஸ்லிம்களையும், தலித்துகளையும் ஒன்றிணைப்பதே அவரின் விருப்பமாக இருந்த்தது . அவ்வழியில் சந்திரசேகர் ஆசாத் முஸ்லிம்களையும், தலித்துகளையும் இணைப்பார்.

Courtesy : Scroll.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here