மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் யுத்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. மேலும் மும்பையில் தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

பீமா-கோராகான் போரின் பின்னணி என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் கோராகான் என்ற இடத்தில், மராத்தா ஆட்சியாளர் பாஜி ராவ் பேஷ்வா படையினருக்கும், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையே கடந்த 1818ஆம் ஆண்டு, ஜன.1ஆம் தேதியன்று மிகப்பெரிய போர் நடந்தது. பேஷ்வா சமூகம் என்பது உயர் ஜாதி பிராமணர்கள் ஆவர். மஹர் என்ற சமூகத்தினரைத் தீண்டத்தாகதவர்களாகக் கருதினர்.

பேஷ்வா ஆட்சிக் காலத்தில் மஹர் சமூகத்தினருக்கு எதிராக ஜாதிய ஒடுக்குமுறை மிக மோசமாக அரங்கேறின. இந்நிலையில்தான் பிரிட்டிஷாருடன் இணைந்து மஹர் சமூகத்தினர், பேஷ்வா படையினருடன் போர் புரிந்தனர்.

இந்த போரின் வெற்றி தினத்தை ஆண்டுதோறும், இந்த சமூக மக்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 1927ஆம் ஆண்டு நடைபெற்ற 109வது வெற்றிக் கொண்டாட்டத்தில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரும் கலந்துகொண்டார்.

புனே, மும்பையில் வன்முறை

இந்த போரின் வெற்றி தினத்தைக் கொண்டாட அகில பாரதிய பிராமண் மகாசபா, இந்து அஹதி, ராஷ்டிரிய ஏகத்மதா ராஷ்டிர அபிமான் உள்ளிட்ட இந்த்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

mumbai-2

இந்த எதிர்ப்பையும் மீறி, திங்கட்கிழமையன்று (நேற்று) பீமா கோரேகானில் தலித் சமூகத்தினர் ஒன்று திரண்டனர். இதற்கு எதிராக இந்துத்துவா அமைப்பினர் வன்முறையில் இறங்கினர். இதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் ஃபதன்கலே (28) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

mumbai-1

இப்படுகொலையைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தலித்துகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும், புதன்கிழமை (நாளை) ஒருநாள் பந்த்திற்கு தலித் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

mumbai

அவுரங்காபாத், புனே ஆகிய மாவட்டங்களின் கிராமப்புறப் பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையின் வெவ்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Source : The quint

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்