மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் யுத்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள கோரேகான் என்ற இடத்தில், கடந்த 1818ஆம் ஆண்டு, உயர் ஜாதியினருக்கு எதிராக நடந்த போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள் வெற்றிபெற்றனர்.

இதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் ஜன.1ஆம் தேதி, தலித் சமூகத்தினர்கள் போர் வெற்றிதினமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு, அகில பாரதிய பிராமணர் மகாசபா, இந்து அஹதி, ராஷ்டிரிய ஏகத்மதா ராஷ்டிர அபிமான் உள்ளிட்ட இந்த்துவா அமைப்பினர், இந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் ஃபதன்கலே (28) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

mumbai3

இப்படுகொலையைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தலித்துகள் தங்களாது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், புதன்கிழமை (இன்று) ஒருநாள் பந்த்திற்கு தலித் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

mumbai1

இதனையடுத்து, மும்பை, புனே நகரின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மும்பையில் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. மும்பையில் டப்பா-வாலாக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: சிறுதொழில் தொடங்க வேண்டுமா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்