பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம்

0
315

மெரினா கடற்கரையில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகில் ரூ.58 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக 2018 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இரவு பகலாக 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10 பகுதிகளாக பிரிக்கப்பட்ட கட்டுமான பணியில், 8 பகுதி வேலைகள் முடிந்துள்ளன. இதுதவிர நடைபாதை, வாகன நிறுத்தம் ஆகிய பணிகளும் முடிவடைந்துள்ளது.

நினைவிடம் அருகில் அருங்காட்சியகம், அறிவுசார் மையம், மேற்கூரை அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. முக்கிய கட்டிடத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

சென்னை ஐ.ஐ.டி. யினரால் வடிவமைக்கப்பட்ட ‘பீனிக்ஸ்’ பறவை வடிவம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் நீளம் இருக்கும். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கிவருகிறது.

துபாயில் இருந்து கட்டுமான சாதனங்கள் எடுத்துவரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நினைவிடம் முழுவதும் தரையில் கிரானைட் கற்களை பதிக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்துவருகிறது. இது ஓரிரு வாரத்தில் நிறைவடைய உள்ளது.

கட்டுமான பணிகள் மிகவேகமாக நடைபெற்று வருவதால் பார்வையாளர்கள் குறிப்பிட்ட பகுதி வரை மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி நினைவிடத்தை திறக்க அரசு திட்டமிட்டு உள்ளது. அதற்கேற்ப பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. பிப்ரவரி 3-வது வாரத்தில் நினைவிடத்தை அரசிடம் ஒப்படைக்க திட்டமிட்டுப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here