பீகார் மாநிலம் ஜெஹனாபாத் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் 35 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

பீகாரில் ஆராரியா மக்களவை தொகுதி மற்றும் ஜெஹனாபாத், பபுவா ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.11) இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்குமிடையே கடும் போட்டி நிலவியது.

இதில் ஜெஹனாபாத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணா குமார் மோகன் யாதவ் 35,036 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோன்று உத்தரப் பிரதேசத்தின் கோராக்பூர், புல்பூர் மற்றும் பீகாரின் அராரிய மக்களவைத் தொகுதிகளில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது. சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள், மற்றும் ராஷ்டிரிய ஜனதா வேட்பாளர் முன்னிலையில் இருப்பதையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்