பீகார் சிறுமி வன்புணர்வு வழக்கு: தலைமை ஆசிரியர், மகன் கைது

0
518

பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை வன்புணர்வு செய்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர் உதய் குமார் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர். தலைமை ஆசிரியரின் மகன் பாதிக்கப்பட்டச் சிறுமியின் வகுப்பில் படித்து வந்த சிறுவனாவான்.

தந்தை மகனைத் தவிர, இரண்டு ஆசிரியர்கள் உட்பட 16 பேர் கடந்த ஆறு மாதங்களாக பள்ளி வளாகத்தில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டனர். முதல் தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்ட 18 பேர் மீதும், பாலியல்
குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்புச் சட்டம், 2012 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை ஆசிரியரின் மகன் மற்றும் அவனது நண்பர்கள் பள்ளிக் கழிவறையில் சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்தனர். மேலும், அச்சம்பவத்தை படம்பிடித்து மிரட்டினர். சீருடையில் இரத்தக் கறையுடன் கழிவறையிலிருந்து வந்த சிறுமியிடம் நடந்ததை கேட்டார் தலைமை ஆசிரியர். தனது கழிவறையை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்த அவர், இச்சம்பவம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால் அவளது வாழ்க்கையை பாழாக்கிவிடுவேன் என மிரட்டினார்.

அடுத்த பத்து நாட்களுக்கு சிறுமி வகுப்புக்குச் செல்லவில்லை. பிறகு அவள் மீண்டும் வகுப்புக்குச் செல்லத் துவங்கியதும், பள்ளி நேரத்திற்கு பிறகு தனது அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு தலைமை ஆசிரியர் கூறினார். காணொளியை வைத்து மிரட்டி தனது அறையில் அச்சிறுமியை வன்புணர்வு செய்தார்.

முதல் தகவலறிக்கையின் படி, குரலெழுப்பினால் காணொளியை வெளியிடுவேன் என மிரட்டி மீண்டும் சிறுமியை வன்புணர்வு செய்தார் தலைமை ஆசிரியர். இதே முறையை மற்ற இரண்டு ஆசிரியர்களும், 15 மாணவர்களும் பயன்படுத்தினர்.

ஜூலை 5 ஆம் தேதி கத்தி முனையில் ஐந்து மாணவர்கள் சிறுமியை வன்புணர்வு செய்தனர். அதன் பிறகே பாதிக்கப்பட்ட சிறுமி ஜூலை 6 ஆம் தேதி முதல் தகவலறிக்கை பதிவு செய்தார். “தலைமை ஆசிரியர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் திங்கட்கிழமை அன்று கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தலைமறைவாகியுள்ள சந்தேகத்திற்குரிய பிறர் தேடப்பட்டு வருகின்றனர்,” என்றார் ஐந்து நபர் விசாரணைக் குழுவின் தலைவரும் சாப்ரா பகுதியின் காவல் துணை கண்காணிப்பாளருமான அஜய் குமார் சிங்.

Courtesy : Deccan Herald

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here