பீகாரில் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

Encephalitis toll reaches 82 in Bihar's Muzaffarpur

0
356

Encephalitis toll reaches 82 in Bihar’s Muzaffarpur

பீகாரில் மூளை காய்ச்சல் காரணமாக 82 குழந்தைகள் இறந்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததால் குழந்தைகள் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

பீகார் , முசாபர்பூருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மருத்துவமனைக்கு பார்வையிட வந்திருந்தபோது அவரின் கண் முன்னே ஒரு குழந்தை  சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது. 

பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் மூளைக் காய்ச்சல் காரணமாக 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வழக்கத்தை விட இந்த ஆண்டு மூளைக்காய்ச்சலினால் குழந்தைகளின் இறப்பு அதிகமாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவலின் படி ஸ்ரீகிருஷ்ணா மருத்துவ கல்லூரியில் 66 குழந்தைகளும் கெஜ்ரிவால் மருத்துவமனையில் 16 குழந்தைகளும் இறந்துள்ளனர். சனிக்கிழமை 61 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 93 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கெஜ்ரிவால் மருத்துவமனையில் தற்போது இந்த மர்ம காய்ச்சல் காரமணாக 172 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள்ளூரில் இதனை சம்கி காய்ச்சல் என அழைக்கின்றனர். மருத்துவர்கள் இதனை அக்யூட் என்சிஃபாலிடிஸ் சிண்ட்ரோம் (ஏஈஎஸ்) என்று தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு திடீரென ஏற்படும் காய்ச்சல் மற்றும் உடலின் சத்துக்குறைபாடு காரணமாக இந்த நோய் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. இருந்தாலும் நோய் பாதிப்பின் உண்மைத்தன்மை இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு இதற்கு தக்க தீர்வு காண உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here