பீகாரில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதும், இறந்ததும் தலித், முஸ்லிம் குழந்தைகளே

According to health officials in Muzaffarpur, AES cases are mostly coming from Mushahar, Ravidas and Paswan communities due to “their poor living conditions”.

0
362

பீகார், முசாபர்பூரில் மூளைகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் முசாகர், ரவிதாஸ் மற்றும் பஸ்வான் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் மோசமான ஏழ்மையான  வாழ்க்கையால் அக்குழந்தைகள் மூளைகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

செடி மன்ஜி, ரவீந்தர் மன்ஜி, அனூப் மன்ஜி, ராஜ் கிஷோர் ராம், ஹரண் பஸ்வான் எல்லோருமே தலித்துகள். இவர்கள் எல்லோரும் மூளைகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் இறந்த குழந்தைகளின் அப்பாக்கள். 

செடி மன்ஜியின் 8 வயது மகன் ஆதித்யா குமார் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முசாபர்பூரில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரியில்  இறந்தார். இது குறித்து செடி மன்ஜி கூறுகையில் என்னுடைய மகன் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தான். நாங்கள் மிகவும் ஏழை. சாப்பாட்டுக்கே தினமும் கஷ்டபடுபவர்கள் ஆனால் கடவுள் எங்கள் குழந்தைகளை கொல்கிறார். நான் மட்டுமல்ல என்னை மாதிரியான பல தலித் குடும்பங்களின் நிலைமை இதுதான் என்றார். 

மூளைக்காய்ச்சல் எங்களை மாதிரியான சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகளுக்கு கிடைத்த சாபம். ஒவ்வொரு வருடமும் எங்கள் குழந்தைகள் இறக்கிறார்கள். ஆனால் அதைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்று பஸ்வான் கூறுகிறார். 

பஸ்வானின் 10 வயது மகன் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முசாபர்பூரில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரியில்  இறந்திருக்கிறார். 

ஜோகிந்தர்  ராம் , சங்கர் ராம், ராஜ் குமார் , ராஜ்நீத் ராம் ஆகியோர் மூளை காய்ச்சலால் தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள். 

20 வருடங்களுக்கும் மேலாக மூளைக்காய்ச்சல் நோய் வருகிறது . முதலில் முசாபர்பூரில்தான் வந்தது , ஏழைகள் வாழும் பகுதிகளுக்கு பரவியது. பாதிக்கப்பட்டவர்களில்  75 சதவீத பேர் மிகவும் பின்தங்கிய  சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். தலித்துகளும், முஸ்லிம்களும்தான் இதில் அடங்குவர். வசதியான , பணம் படைத்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைகூட பாதிக்கப்படவில்லை. 

newsclick குழு  மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  இறந்த குழந்தைகளைப் பற்றிய தகவல்களை ஶ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரியிடமிருந்து சேகரித்தபோது அவர்களின் பெயர்கள் மன்ஜி, ராம் , பஸ்வான் , சாஹ்னி, மாஹ்தோ, மற்றும் யாதவ் என்றிருந்தது. இவர்கள் அனைவரும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும், ஏழை முஸ்லிம்களும்தான் என்று முசாபர்பூர் சுகாதாரத் துறை அதிகாரியும்  கூறினார்.  

ரஞ்சீவ் என்ற சூழலியலாளர் தலித் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள். சுத்தமற்ற தண்ணீரைக் குடிக்கும் நிலையில் இருக்கிறார்கள் இதனால் மூளைக் காய்ச்சல் சீக்கிரம் அவர்களை தொற்றிக் கொள்ளும் என்கிறார் சூழலியலாளர் ரஞ்சீவ். 

இந்த நோயால் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடுதான் என்று டாக்டர்களும், நிபுணர்களும் கருதுகிறார்கள். பீகாரில்  5 வயதுக்குட்பட்ட பல குழந்தைகள்  ஊட்டச்சத்து குறைபாடுடன் இருக்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு கூறி இருக்கிறது . 

சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த் நோய் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள் . தலித் குழந்தைகள் மற்றும் ஏழை முஸ்லிம்களின் குழந்தைகள் பெரும்பாலும் ஏழ்மையில் வாழ்வதால்  ஊட்டச்சத்து குறைபாடுடனே இருக்கிறார்கள். 

மூளைக்காய்ச்சல் நோயால் 150க்கும்  மேற்பட்ட குழந்தைகள் பீகாரில் இறந்துள்ளதையடுத்து மத்திய அரசு இதற்கான சரியான காரணத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கியது. குழந்தைகளின் இறப்புக்குப் பின்னால் ஒரு முக்கிய காரணியாக வறுமைதான் லிச்சி பழங்கள் அல்ல என ஆரம்பகட்ட கணக்கெடுப்பு கூறியுள்ளது.

பீகார்  முசாபர்பூர்  மாவட்டத்தில் 289 குடும்பங்களில் 280 குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தின் அன்றாட தினக்கூலிகளாகவே உள்ளனர். இந்த குடும்பத்தில் வெறும் 29 சிறுமிகள் முக்கிய மந்திரி கன்யா உத்தன் யோஜனாவின் பயனாளிகளாக இருந்தனர். இது பெண் குழந்தைகளுக்கு பண உதவி வழங்கும் திட்டமாகும். 91 குடும்பங்கள் பிரதமர் வீட்டு திட்ட சலுகைகளை பெற்றுள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். 96 பேருக்கு ரேஷன் கார்டு இல்லை. 124 குடும்பங்களுக்கு கடந்த மாதம் பொது விநியோக முறையிலிருந்து ரேஷன் கிடைக்கவில்லை. இந்த குடும்பங்களில் 159 பேருக்கு மட்டுமே தங்கள் குழந்தைகளை முசாபர்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைத்தது. 

மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 383 குழந்தைகளில் 100 பேர் இறந்துள்ளனர். 223 பேர் பெண் குழந்தைகளும் 159 ஆண் குழந்தைகளும் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான நோயாளிகள்  (84 பெண் குழந்தைகள் மற்றும் 51 சிறுவர்கள்) 1-3 வயதிற்குட்பட்டவர்கள் லிச்சி பழத்தோட்டங்களை பார்வையிட வாய்ப்பில்லை, பழங்களைச் சாப்பிடவும் வாய்ப்பில்லை.  3-5 வயதுக்குட்பட்ட 70 பெண்கள் மற்றும் 43 சிறுவர்கள், 5-7 வயதில் 36 பெண்கள் மற்றும் 31 சிறுவர்கள், 7-9 வயதில் 19 பெண்கள் மற்றும் 14 சிறுவர்கள், 9-11 வயதில்  10 சிறுவர்கள் மற்றும் 7 பெண் குழந்தைகளும் , 11 வயதில் 7 சிறுவர்களும் மற்றும் ஒரு பெண்ணும் உள்ளனர். நோயாளிகளில் பெரும்பான்மையானவர்கள் (97 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்) இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து இருந்தது. 

மூளைக்காய்ச்சல் வைரஸினால் உருவாகிறது. இதன் அறிகுறிகள் காய்ச்சல், வாந்தி மற்றும் கைகால் வலிப்பும் பக்கவாதம் மற்றும் கோமா ஆகியவை ஏற்படும். கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 

இந்த நோய்க்கான துல்லியமான காரணங்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும் பெரும்பாலான மருத்துவர்கள் வெப்ப அலைத்தாக்கத்தால் ஏற்படுவதாக கூறுகின்றனர். லிட்சி பழத்தினை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக மக்கள் சிறந்த சுகாதார சேவையை பெற்றிருந்தால் மரணங்கள் தவிர்க்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

கடந்த ஆண்டு உலகளவில் பசி குறியீட்டில் 119 நாடுகளில் 103 வது இருந்தது. தனது தேசிய வருமானத்தில் ஒரு சதவீதத்திற்கும் மேலாக சுகாதாரத்திற்காக செலவிடும் நாடாக இது உள்ளது. இது உலகளவில் மிகக் குறைந்த ஒன்றாகும். 

 மூளைக்காய்ச்சல் எதனால் உருவாகிறது என்று அரசுக்கு தெளிவு இல்லை. 1995 லிருந்து முசாபர்பூரில் குழந்தைகளை இந்த நோய் தாக்கி வருகிறது . இந்த நோய் எதனால் வருகிறது என்று எங்களுக்கு தெரியவில்லை. வைரஸ், பாக்டீரியா, விஷத்தனமை, லிச்சி பழம், ஊட்டச்சத்து குறைபாடு, அதிக வெப்பம், என்று எந்த காரணங்களால் இந்த நோய் வருகிறது என்பது குறித்த தெளிவு எங்களுக்கு இல்லை . பல ஆராய்ச்சிகள் நடந்தும் அட்லாண்டாவில் இருக்கும் நோய் கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் நிபுணர்கள் கூட இது குறித்து ஆராய்ச்சி செய்துவிட்டனர் ஆனால் இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதாஇ கண்டுபிடிக்க முடியவில்லை என்று முதன்மை செயலாளர் தீபக் குமார்  NewsClick தளத்திடம் கூறியுள்ளார்

newsclick.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here