பீகார் மாநிலத்தில் மாணவர்கள் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலா நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளி ஒன்றில், மதியம் 1.30 மணிக்கு பள்ளி முடிந்து மாணவர்கள் வெளியில் வந்துள்ளனர். அப்பொழுது அந்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வந்த பொலேரோ வாகனம் ஒன்று சாலையைக் கடக்க முயன்ற மாணவர்கள் மீது மோதியது.

bihar-11

இந்த விபத்தில் மாணவர்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் பாட்னா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்.19ஆம் தேதியன்று, பாட்னா-கயா நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here